15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை அருகே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

211

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை அருகே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிங்கம்புணரி உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் வட்டார தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.