சிவகங்கை அருகேயுள்ள அருள்மிகு ஆண்டி பாலகர் கோயிலில், கும்பாபிஷேக விழா வெகு விமிரிசையாக நடைபெற்றது.

277

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்துள்ள சுக்காம்பட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அருள்மிகு ஆண்டிபாலகர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று காலை இரண்டு கால பூஜையுடன் விழா தொடங்கப்பட்டது. பின்னர் யாகசாலையிலிருந்து புறப்பட்ட தீர்த்த குடங்கள் கோவிலை சுற்றி வந்து கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது.