சித்திரை முதல் நாளையொட்டி, கோயில்கள் மற்றும் வீடுகளில் கனிகாணும் நிகழச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

203

சித்திரை முதல் நாளையொட்டி, கோயில்கள் மற்றும் வீடுகளில் கனிகாணும் நிகழச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
சித்திரை மாதம் முதல் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிகாணும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனைமுன்னிட்டு, சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் நடைபெற்ற கனி காணும் நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர், கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்ட காசுகளையும், கனிகளையும் பக்தர்கள் பெற்றுக் கொண்டனர். இதனால், கோயிலில் கூட்டம் அலைமோதியது.
சித்திரை முதல் நாளையொட்டி, வீடுகளிலும் கனிகாணும் நிகழ்ச்சி நடைபெற்றது. சித்திரை விஷூ எனப்படும் இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ண பகவானின் படம், முகம் பார்க்கும் கண்ணாடி, காய் மற்றும் கனி வகைகள், நாணயங்கள், தங்க ஆபரணங்கள், காட்டு கொன்றை பூக்கள் உள்ளிட்டவைகளால் அலங்கரிப்பட்டிருந்தது. சித்திரை முதல்நாள் புத்தாண்டு அன்று, காலையில் எழுந்து வந்து அலங்கரிக்கப்பட்டவற்றை முதல் காட்சியாக கண்டனர். இதனால், ஆண்டு முழுவதும் வளமாக அமையும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். இதன் பின்னர், குடும்பத்தில் உள்ள முதியவர்கள் இளையவர்களுக்கு கை நீட்டம் என்ற பெயரில் நாணயங்கள் வழங்குவதுண்டு.