சித்தூர் அருகே செம்மரக்கட்டைகள் கடத்திய கும்பல் தப்பியோடியதால், காரை பறிமுதல் செய்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

340

சித்தூர் அருகே செம்மரக்கட்டைகள் கடத்திய கும்பல் தப்பியோடியதால், காரை பறிமுதல் செய்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி அடுத்த சின்னகன்னபல்லி கிராமத்தில் செம்மரங்கள் கடத்துவதாக தொட்டம்பேடு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், வன அலுவலர் வெங்கடசுப்பையா தலைமையிலான வனத்துறையினர், சிங்கமால சோதனை சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற காரை வனத்துறையினர் நிறுத்த முயன்றபோது கார் நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது.

சந்தேகமடைந்த வனத்துறையினர், காரை விரட்டி பிடித்தபோது காரில் இருந்தவர்கள் தப்பி சென்றுவிட்டனர். பின்னர், வனத்துறையினர் காரில் சோதனை செய்து பார்த்தபோது, 160 கிலோ எடையுள்ள செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு 1 லட்சம் ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, காருடன் செம்மரங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்து, தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.