தனியார் பேருந்தில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது !

735

ஓமலூர் அருகே தனியார் பேருந்தில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அழகாபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். கூலித்தொழிலாளியான இவருக்கு 14 வயதில் கவுசல்யா என்ற மகள் உள்ளார். இவர் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் இவர் தனியார் பேருந்தில் நடத்துனராக வேலைபார்க்கும் பெருமாளுடன் பழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பழக்கம விபரீதமாக மாறியது. சிறுமி கவுசல்யாவை பேருந்து ஓட்டுனர், நடத்துனர் உள்பட 3 பேர் பேருந்தில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கடத் இதனையடுத்து கவுசல்யா பெற்றோரிடம் அளித்த புகாரின் பேரில் அப்பகுதியினர் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து கவுசல்யாவை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.