சீர்காழி அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..!

185

சீர்காழி அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஆனந்தகூத்தன் கிராமத்தை சேர்ந்த வீரமணியின் மகன் விமல், அதே ஊரில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறான். பொங்கலை முன்னிட்டு தனது நண்பர்களுடன், குளத்திற்கு குளிக்க சென்றபோது, எதிர்பாராத விதமாக விமல் தண்ணீரில் மூழ்கியுள்ளான். சக நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் புகார் அளித்ததின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து குளத்தில் இருந்து மாணவரின் உடலை மீட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.