அடுத்து அடுத்து 5 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை. இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து வருவதில்லை என குற்றச்சாட்டு.

280

சீர்காழி அருகே அடுத்து அடுத்து 5 கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா ஆச்சாள்புரம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு செல்லத்துரை, சேதுராமன், சக்திவேல் ஆகியோரது கடைகளை மர்ம நபர்கள் உடைத்து, சுமார் 62 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை திருடி சென்றுள்ளனர். அருகில் உள்ள வினோத் என்பவரது Studio, பாலமுருகனுக்கு சொந்தமான அடகு கடை ஆகியவற்றையும் உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இத் துணிகர சம்பவம் குறித்து கொள்ளிடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சீர்காழி D.S.P.வெங்கடேசன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.ஆச்சாள்புரம் கடை வீதியில் இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து சென்றால், இதுபோன்ற திருட்டு குற்றங்களை தவிர்க்கலாம் என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர்.