சிரியாவின் காமிஷ்லி நகரில் நடைபெற்ற இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர். 170 பேர் படுகாயம் அடைந்தனர்.

249

சிரியாவின் காமிஷ்லி நகரில் நடைபெற்ற இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர். 170 பேர் படுகாயம் அடைந்தனர்.
வடகிழக்கு சிரியாவில் உள்ள காமிஷ்லி நகரில் குர்திஷ் இனமக்கள் அ்திகமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களுடைய தலைமை முகாம் மீது லாரியில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி மோதியதில் பலர் பலியாகியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேபோல, காமிஷ்லி நகரில் உள்ள சோதனைச்சாவடியின் நுழைவு வாயிலில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் பத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.
இந்த இரு தாக்குதல்களுக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள்தான் காரணமாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ள நிலையில், இந்த தாக்குதல்களில் பலியானோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதாகவும், படுகாயம் அடைந்த சுமார் 170 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காமிஷ்லி நகரம் அமைந்துள்ள ஹசாகே மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.