சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 30 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள இத்லிப் பகுதியில் அரசு படையினர் வான்வழி தாக்குதல் நடத்தினர். இதே போன்று, அலெப்போ பகுதியிலும் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்,3 குழந்தைகள் உள்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால், வடக்கு சிரியாவில் அரசு படைகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 30 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.