சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள அலெப்போ நகரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் ராணுவத்தினர் முன்னேறி வருகின்றனர்.

207

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள அலெப்போ நகரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் ராணுவத்தினர் முன்னேறி வருகின்றனர்.
சிரியாவில் 6 ஆண்டுகளாக அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது . கடந்த ஒரு மாத காலமாக ராணுவத்தினர் தொடர்ந்து வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். இதில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த போரில் அலெப்போ நகரில் உள்ள பழைய நகரம் உள்பட நான்கில் மூன்று பகுதியை சிரிய ராணுவத்திடம் கிளர்ச்சியாளர்கள் இழந்துள்ளனர். இதையடுத்து 5 நாள் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு கிளர்ச்சியாளர்கள் அழைப்பு விடுத்தனர். அழைப்பை ஏற்காத சிரிய ராணுவம், கிளர்ச்சியாளர்களிடம் இருந்து அலெப்போ நகரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் முன்னேறி வருகிறது.