சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது உச்சகட்ட தாக்குதல் நடத்துவது தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி ஆலோசனை நடத்தியுள்ளார்.

227

சிரியாவில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ரஷியாவுடன் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்துவது தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் ஆலோசனை நடத்துவதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி மாஸ்கோ நகருக்கு சென்றுள்ளார்.
ரஷிய அதிபரின் கிரெம்ளின் மாளிகையில் சுமார் 3 மணிநேரம் விளாடிமிர் புதினும், ஜான் கெர்ரியும் இதுதொடர்பாக முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆலோசனையில், சிரியாவில் ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளை ஒழித்து, அங்கு நிரந்தரமாக அமைதியை நிலைநாட்டும் வகையில் அமெரிக்காவும், ரஷியாவும் அங்கு தனித்தனியாக தலைமை செயலகங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டது.
மேலும், தீவிரவாதிகள் மீதான உச்சகட்ட தாக்குதலை திட்டமிட்டு செயல்படுத்துவதில் இருநாடுகளும் ஒருமித்த கருத்துடன் இணைந்திருப்பது என்றும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.