இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசர நிலையை வாபஸ் பெற்றது சிறிசேனா அரசு ..!

842

இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசர நிலையை திரும்பப் பெறுவதாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள கண்டியில் புத்த மதத்தினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, கடந்த மார்ச் 6 ஆம் தேதி அவரச நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, வன்முறையை தூண்டுவதாகக் கூறி, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களும் முடக்கப்பட்டன. பதற்றமான இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டது. இந்த நிலையில், பேஸ்புக் நிறுவன அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளை சந்தித்து தங்களின் இணையதளம் வன்முறையை தூண்டுவதற்கு பயன்படுத்தப்படாது என உறுதி அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, இலங்கையில் நிலைமை கட்டுக்குள் வந்ததையடுத்து அவசர நிலை பிரகடன உத்தரவை ரத்து செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாகி உள்ளதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக சிறிசேனா தெரிவித்துள்ளார்.