ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்-இலங்கை அதிபர் சிறிசேனா!

419
maithribala sirisena

இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது தமிழர்களை கொன்ற ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
இலங்கை இறுதிக்கட்ட போரின் போது அந்நாட்டு ராணுவத்தினரால் 40,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக ஐ.நா. புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய சிறிசேனா, விடுதலை புலிகளுக்கு எதிராக 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின் போது தமிழர்களை கொன்று குவித்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அப்போது ஆட்சியில் இருந்தவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, ராணுவத்தினர் சிலர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதை மனசாட்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும், போர்க்குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் நிரபராதிகள் என தெரிய வந்தால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் சிறிசேனா குறிப்பிட்டார்.