பிரதமரின் கோரிக்கைக்கு அதிபர் சிறிசேனா எதிர்ப்பு !

129

இலங்கையில் தேசிய அரசாங்கம் அமைக்க விரும்பவில்லை என்று பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவின் நடவடிக்கைக்கு அதிபர் சிறிசேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி, 2015-ம் ஆண்டு சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியுடன் சேர்ந்து அரசு அமைத்தது. இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். ஆனால் ராஜபக்சேவால் 2 முறை பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், மீண்டும் விக்ரமசிங்கேவையே பிரதமராக நியமிக்க வேண்டிய நிலைக்கு சிறிசேனா தள்ளப்பட்டார். அவர் நியமிக்கப்பட்ட டிசம்பர் மாதத்தில் இருந்து, விக்ரமசிங்கே தலைமையிலான அரசு தேவையான பெரும்பான்மை இல்லாமலேயே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இலங்கையில் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கும்படி விக்ரமசிங்கே கோரிக்கை விடுத்தார். பிரதமரின் இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அதிபர் சிறிசேனா, தேசிய அரசாங்கம் அமைக்க தாம் விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.