சிறிசேனா உத்தரவுக்கு இலங்கை உயர்நீதிமன்றம் தடை : ரனில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்ப்பு

111

இலங்கையில் நிலவி வரும் அரசியல் நெருக்கடி காரணமாக தனது பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். இதனால் புதிய பிரதமராக ரணில் விக்கரமசிங்கே மீண்டும் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்கிரமசிங்கேவை நீக்கி விட்டு, புதிய பிரதமராக ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா கடந்த அக்டோபர் மாதம் நியமித்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்த நிலையில், ராஜபக்சேவிற்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இரண்டு முறை நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே நாடாளுமன்றத்தை கலைத்து சிறிசேனா பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றமும் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலகி உள்ளார்.

இதனால் இலங்கை பிரதமராக ரணில் விக்கரமசிங்கே மீண்டும் பதவியேற்பார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலகியதையடுத்து, இலங்கையில் நீடித்து வந்த அரசியல் குழப்பம் தணிகின்றது.