ராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்

248

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் திட்டம் தீட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. #Srilanka #MahindaRajapaksa #Sirisena

இலங்கையில் அடுத்தடுத்து நிலவும் அரசியல் நகர்வுகள் உலக நாடுகளை உற்று நோக்க செய்துள்ளது. தம்முடைய ஒப்புதல் இல்லாமல் ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என சபாயாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார் . மேலும் தம்முடைய பணி தொடரும் என்றும் ரனிலுக்கு ஆதரவாக 116 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் வழங்கி இருப்பதை தொடர்ந்தே தாம் இதனை திட்டவட்டமாக அறிவித்து இருப்பதாகவும் ஜெயசூர்யா கூறியுள்ளார். அண்மையில் நடைபெற்ற மாற்றங்ளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்துள்ள அதிபர் சிறிசேனாவும், ராஜபக்சேவும் ,சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். அதன் முன்னோட்டமாக அங்கு அவை முன்னவராக தினேஷ் குணவர்த்தன தேர்வு செய்யப்பட்டு இருப்பதுடன் சில அமைச்சர்களுக்கும் பதவி பிராமணம் அவசர கதியில் நடைபெற்றுள்ளது இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடியில் அங்கு எந்த நேரமும் கலவரம் வெடிக்கும் அபாயம் நிலவுகிறது. இதற்கிடையே ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்னா மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில், ரணில் விக்ரமசிங்கே கட்சியை சேர்ந்த எம்பிக்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.