எங்கள் சொந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்ள எங்களுக்கு சில காலம் தேவை – அதிபர் சிறிசேனா

103

இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு எதிராக அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கருத்து தெரிவித்துள்ளது இருவருக்கும் இடையே மோதல் போக்கு தொடர்வதை காட்டியுள்ளது.

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் இரு தரப்பிலும் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை மற்றும் அமெரிக்கா இணைந்து விசாரிக்க வேண்டும் என கடந்த 2015-ம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுபற்றி கருத்து தெரிவித்த இலங்கை அதிபர் சிறிசேனா இலங்கையில் யாருடைய தலையீடும் இல்லாமல் எங்கள் சொந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்ள எங்களுக்கு சில காலம் தேவை என்றும் ஐ.நா. கூட்டத்துக்கு எனது சார்பில் ஒரு குழுவை அனுப்புவேன் என தெரிவித்தார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகமும், வெளியுறவு அமைச்சகமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஐ.நா. தீர்மானத்தின்படி ஒரு நீண்டகால மற்றும் நிலையான சமரச தீர்வை அடைவதற்கான முயற்சியை இலங்கை மேற்கொள்ளும். ஐ.நா. கூட்டத்தில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு மேலும் கால அவகாசம் கேட்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதிபர் சிறிசேனாவுக்கு எதிராக பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கருத்து தெரிவித்துள்ளது இருவருக்கும் இடையே மோதல் போக்கு தொடர்வதையே எடுத்துக்காட்டுகிறது.