சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம். போக்குவரத்து முடக்கம், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

316

நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் ஜிஎஸ்டி மசோதா நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த் குமார், மாநிலங்களவையில் நாளை தாக்கல் செய்யப்பட இருக்கும் மசோதா பட்டியலில் ஜிஎஸ்டி மசோதா சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மசோதாவிற்கு சாதகமான சூழ்நிலையே நிலவுவதாக கூறிய அவர், மசோதாவை நிறைவேற்ற ஆதரவு அளிக்கும்படி அனைத்து கட்சிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே காங்கிரஸ் மூத்த தலைவர் பி.எல். பூனியா செய்தியாளர்களிடம் பேசியபோது, நாட்டின் பொருளாதாரம், தொழில்துறை, வர்த்தகம் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி சட்டம் மிகவும் அவசியம் என்றும், அதுதொடர்பான மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே காங்கிரஸின் விருப்பம் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், ஜிஎஸ்டி மசோதா மாநிலங்களவையில் நாளை தாக்கல் செய்யப்பட இருப்பதையொட்டி, அடுத்த 3 நாள்களும் பாஜக எம்.பிக்கள் அனைவரும் கட்டாயம் அவை அலுவல்களில் பங்கேற்க வேண்டும் என்று பாஜக கொறடா சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.