பிரபல திரைப்பட இயக்குனர் சிராஜ் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 65.

639

பிரபல திரைப்பட இயக்குனர் சிராஜ் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 65.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் திரைப்பட இயக்குனர் சிராஜ். இவர், 1989 ஆம் ஆண்டு நடிகர் ராமராஜன் நடிப்பில் வெளியான என்ன பெத்த ராசா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து ஊரெல்லாம் உன் பாட்டு, என் ராஜாங்கம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். இந்த நிலையில், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சிராஜ், சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, நேற்று இரவு மாரடைப்பு காரணமாக அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இயக்குனர் சிராஜின் மறைவுக்கு திரைப்பட பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.