சிறார் வன்கொடுமைக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

1271

சிறார் வன்கொடுமைக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூட்டம் நடைபெற்றது. சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால், போக்சோ சட்டப்படி குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் குற்றங்ளை தடுப்பது தொடர்பாக சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டு வர இந்தக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. அதன்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை வழங்கும் வகையில் போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும். சிறார் மீதான பாலியல் வன்கொடுமை குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.