பாகிஸ்தானில் சீக்கியர் அவமதிப்பு..!

768

பாகிஸ்தானில் தலைப்பாகையை கழற்ற வைத்து சிக்கியர் ஒருவர் அவமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் வசித்து வருபவர் குலாம் சிங். இவர் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்குள்ள தியரா சாஹால் பகுதியில் காவல் துறை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவர் அறக்கட்டளை நபர்களால் தான் அவமதிக்கபட்டேன் என்று சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசும் வீடியோவை பதிவிட்டுள்ள குலாம்சிங், அறக்கட்டளையை சேர்ந்த நபர்கள் தன்னை வீட்டை விட்டு காலி செய்யுமாறு கூறியதாக தெரிவித்தார்.

மேலும் அந்த நபர்கள் தனது தலைப்பாகையை கழற்றிவிட்டு, சீக்கிய மதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் குற்றம்சாட்டினர். மேலும் இச்சம்பவம் தொடர்பான புகைப்படங்களையும் இணையதளத்தில் அவர் பதிவேற்றம் செய்துள்ளார்.