இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி : இந்திய அணி தோல்வி

542

இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்தது குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கம் அளித்தே தீர வேண்டும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்திய அணி வீரர்கள் வெளிப்படுத்தவில்லை என சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறிவுள்ளார். வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் இல்லாமல் தோல்வி அடைந்தது அதிருப்தி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அனைவருக்கும் பதில் கூறியே ஆக வேண்டும் என்றும் ஹர்பஜன் சிங் சாடிவுள்ளார்.