சிங்கப்பூர் பறவைகள் சரணாலயத்தில் நடக்க முடியாமல் தவித்த நாரை பிரத்யேக ஷூ அணிவித்து நடக்க பயிற்சி !

379

சிங்கப்பூர் சரணாலாயம் ஒன்றில் ஒழுங்காக நடக்க முடியாமல் தவித்த நாரை பறவைக்கு பிரத்யேக காலணிகளை அணிவித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிங்கப்பூரில் உள்ள ஜூராங் என்ற இடத்தில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் இன்குபேட்டரில் வைத்து செயற்கையாக நாரை குஞ்சு பொறிக்கப்பட்டது. ஆனால் அந்த பறவையால் ஒழுங்காக நடக்க முடியவில்லை. இதனால் சரணாலய நிர்வாகம் அந்த நாரை பறவைக்கு பிரத்யேக காலணிகளை வடிவமைத்தது. மேலும் அந்த நாரைக்கு காலணிகளை அணிவித்து நடக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.