சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் திருமலையில் சாமி தரிசனம்..!

418

சிங்கப்பூர் தகவல் தொடர்பு மற்றும் தகவல்துறை அமைச்சர் ஈஸ்வரன், தனது குடும்பத்தாருடன், திருப்பத்தியில் சாமி தரிசனம் செய்தார்.

ஆந்திர மாநில நகராட்சி துறை அமைச்சர் நாராயணன், அமைச்சர் ஈஸ்வரனுடன் இருந்து, சாமி தரிசனத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். அப்போது பேசிய அமைச்சர், நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிக்கும் புகழ்பெற்ற திருத்தலம் திருமலை திருப்பதி என்று கூறினார்.

மேலும், ஆந்திர மாநிலத்தின் தலைநகரான அமராவதி நகரத்தை கட்டமைப்பதில், சிங்கபூரின் பங்களிப்பும் உள்ளதாக அவர் தெரிவித்தார். இதேபோன்று, பிரபல நடிகை அஞ்சலி, திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. தரிசனம் முடிந்து வெளியே வந்த நடிகை அஞ்சலியுடன், ரசிகர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர்.