உலகக் கோப்பை பேட்மிண்ட்டன் போட்டியில் இந்தியாவின் சிந்து வெள்ளிப்பதக்கம்..!

412

உலகக் கோப்பை பேட்மிண்ட்டன் போட்டியில் இந்தியாவின் சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

உலகக் கோப்பை பேட்மிண்ட்டன் போட்டி சீனாவில் உள்ள நான்ஜிங் நகரில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் 3வது இடத்தில் உள்ள இந்தியாவை சேர்ந்த சிந்து, உலகின் 8வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் கரோலினா மரின் ஆகியோர் மோதினர். முடிவில் 19க்கு 21, 10க்கு 21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்த சிந்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.