உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு பி.வி.சிந்து முன்னேற்றம்..!

357

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியாவின் பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார்.

சீனாவில் உள்ள நான்ஜிங் நகரில் உலக பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி சுற்றில் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இந்தியாவின் பி.வி.சிந்துவும், ஜப்பான் நாட்டு வீராங்கனை நஜோமி ஒகுகராவும் மோதினர். 58 நிமிடத்திற்கு நீடித்த இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய சிந்து 21 க்கு 17, 21 க்கு 19 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் அவர் வெண்கல பதக்கத்தையும் உறுதி செய்துள்ளார். அரையிறுதி போட்டியில் சிந்து, ஜப்பான் வீராங்கனை அகானே யமகசியை எதிர்கொள்கிறார்.