அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் பிரிவு ஆட்டத்தில் சிமோனா ஹாலெப் தோல்வி..!

362

அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் பிரிவில் ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் ருமேனியாவை சேர்ந்த முதல்நிலை வீராங்கனையான சிமோனா ஹெலெப், எஸ்தோனியா நாட்டை சேர்ந்த கைய் கனேபியை எதிர்கொண்டார். இதில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாலெப், 2க்கு 6, 4க்கு 6 என்ற செட்கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். மற்ற ஆட்டங்களில் உக்ரைன் நாட்டின் எலினா, பெலாரஸ் நாட்டின் லாப்கோ, ருமேனியாவின் கமேலி ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.