சிம்­புவின் சொத்­துகள் பறி­முதல் செய்­யப்­ப­டும் : உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

732

அட்வான்ஸ் வாங்கிவிட்டு திரைப்படத்தில் நடிக்க மறுத்த சிம்புவை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. மேலும் சிம்புவின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என நீதிபதி எச்சரித்துள்ளார்.

பேசன் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் நடிகர் சிம்புவை கதாநாயகனாக வைத்து அரசன் என்ற திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்தது. இதில் சிம்புவுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் என பேசப்பட்டு, அதில் 50 லட்சம் ரூபாய் அட்வான்சாக கொடுக்கப்பட்டது. ஆனால் சிம்பு இந்த படத்தில் நடிக்காமல் இழுத்தடித்தார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சிம்பு பணத்தை திருப்பி தர வேண்டும் இல்லாவிட்டால் , அவரது சொத்துக்களை முடக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பேசன் மூவி மேக்கர்ஸ் உரிமையாளர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி கோவிந்தராஜ் விசாரித்தார். அப்போது நடிகர் சிம்பு பணத்தை திருப்பி தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் சொத்துக்கள் முடக்கப்படும் என எச்சரித்தார். அதுமட்டுமின்றி, கார், பிரிட்ஜ், செல்போன் உள்பட யாவும் பறிமுதல் செய்ய நேரிடும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். சிம்புவின் சர்ச்சை விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.