ஜல்லிக்கட்டுக்காக போராடிய தன்னையும் கைது செய்யுங்கள் என காவல்துறைக்கு நடிகர் சிம்பு உணர்ச்சிபூர்வமாக பேசியுள்ளார்.

194

ஜல்லிக்கட்டுக்காக போராடிய தன்னையும் கைது செய்யுங்கள் என காவல்துறைக்கு நடிகர் சிம்பு உணர்ச்சிபூர்வமாக பேசியுள்ளார்.
சென்னை தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு, 6 நாட்கள் பாதுகாப்பு அளித்த காவல்துறையினர், 7வது நாளில் உடனடியாக கலைந்து செல்லும்படி தடியடி நடத்தியது ஏன் என்று கேள்வி எழுப்பினார். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக போராடி கைது செய்தவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும் என்று கூறிய சிம்பு, இல்லை என்றால் ஜல்லிக்கட்டுக்காக ஒரு வாரம் காலம் வீட்டிலேயே போராடிய தன்னையும் கைது செய்யுமாறு கேட்டு கொண்டார். சென்னை மெரினாவில் போராடுவதற்கு அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், மெரினாவை தவிர பல இடங்களில் மாணவர்கள் போராடுவதற்கு இடம் இருப்பதாக தெரிவித்தார். போராட்டத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் தமிழக அரசு வழங்கவேண்டும் என்றும், இல்லை என்றால் சாலையில் நடனமாடியாவது, அவர்களுக்கு நிவாரணம் தருவேன் என்று நடிகர் சிம்பு குறிப்பிட்டுள்ளார்.