ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை அகதி தற்கொலை முயற்சி..!

98

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை அகதி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு சட்டவிரோதமாக வந்த ஜாய் என்பவரை கைது செய்த போலீசார் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்தனர். ஆனால் கடந்த 2017ம் ஆண்டு அகதிகள் முகாமில் இருந்து ஜாய் தப்பிச் சென்றார். இந்நிலையில் மீண்டும் தனது தாய் நாடான இலங்கைக்கு தன்னை அனுப்புமாறு கோரிக்கை மனு அளிப்பதற்காக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். ஆனால் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடியாததால் விரக்தியடைந்தவர் தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.