விம்பிள்டன் டென்னிஸ் தொடர் : இறுதி போட்டியில் பெடரர் – சிலிச் மோதல்.

149

விம்பிள்டன் டென்னிஸ் பட்டத்தை 8 வது முறையாக வென்று சாதனை படைக்கும் முனைப்பில் ரோஜர் பெடரர் இன்றைய இறுதி போட்டியில் குரோஷியாவின் மரின் சிலிச்சை எதிர்கொள்கிறார்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் கடந்த 3 தேதி தொடங்கி பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் ஜெர்மனி வீரர் ரோஜர் பெடரர், குரோஷியா வீரர் மரின் சிலிச்சை எதிர்கொள்கிறார். விம்பிள்டன் இறுதி போட்டியில் முதல் முறையாக கால் பதித்திற்கும் மரின் சிலிச் வெற்றி பெற கடுமையாக போராடுவார். 8 வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல பெடரர் முனைப்புடன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால், இன்றைய போட்டியில் சுவாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது.