சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் கல்வி சீர்திருத்தம் கோரி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால், பெரும் பரபரப்பு நிலவியது.

196

சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் கல்வி சீர்திருத்தம் செய்யக்கோரி, மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிலி அதிபர் மாணவர்களை கலந்து ஆலோசிக்காமல் கல்வித் திட்டங்களை அமல்படுத்திவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
இலவசமாக பல்கலைகழகங்களில் படிப்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை சிலி அதிபர் செயல்படுத்தவில்லை என்றும், கல்வி சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் சிலி அரசு மெத்தனமாக இருப்பதாகவும் மாணவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சாண்டியாகோ நகாில் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் காவல்துறையினர் மீது கற்களை வீசியுள்ளனர். இதனால் போலீஸார் வாகனத்தின் மூலம் கண்ணீர் புகையை உண்டாக்கியதால் அந்த இடமே போர்க்களமானது. சிலி போலீஸார் நீண்ட நேரம் கண்ணீர் புகையை உருவாக்கி விரட்டியதையடுத்து,மாணவர்கள் கலைந்து சென்றனர்.