கர்நாடகாவுக்கே தண்ணீர் இல்லை, தமிழகத்துக்கு எவ்வாறு கொடுப்பது – முதல்வர் சித்தராமையா கேள்வி ?

1837

கர்நாடகாவுக்கே தண்ணீர் இல்லை தமிழகத்துக்கு எவ்வாறு கொடுப்பது என்று கேள்வி எழுப்பியுள்ள முதல்வர் சித்தராமையா, 4 டிஎம்சி தண்ணீரை விடுவிக்க முடியாது என்று கைவிரித்துள்ளார்.
காவிரி வழக்கில் தமிழகத்துக்கு 4 டிஎம்சி தண்ணீரை தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தாவன்கரே நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, தங்களுக்கே தண்ணீர் இல்லை என்று கூறினார். தமிழகத்துக்கு எங்கிருந்து காவிரி தண்ணீர் கொடுப்பது என்று கேள்வி எழுப்பிய அவர், உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து அரசு வழக்கறிஞர்களுடன் விவாதிக்க போவதாக தெரிவித்தார். உச்சநீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில், சித்தராமையா கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.