மாநிலத்திற்கு தனிக்கொடி இருக்க கூடாது என்று யாரும் சொல்ல முடியாது – கர்நாடக மாநில முதல்வர் சித்தராயமையா!

358

மாநிலத்திற்கு தனிக்கொடி இருக்க கூடாது என்று யாரும் சொல்ல முடியாது என, கர்நாடக மாநில முதல்வர் சித்தராயமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்திற்கு அதிகாரப்பூர்வமாக தனி கொடி உருவாக்க வேண்டும் என்று கன்னட அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனை ஏற்று கொடியை வடிவமைப்பதற்காக அம்மாநில அரசு குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு சிலர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில முதல்வர் சித்தராமையா, மாநிலத்திற்கு தனிக்கொடி இருக்க கூடாது என்று யாரும் சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார். தேசிய கொடியின் மீதான தங்களில் மரியாதை உயர்வானது என்று சுட்டிக் காட்டிய அவர், கர்நாடக மாநிலத்திற்கு தனிக்கொடி தேவை என்று வலியுறுத்தினார்.