காவிரி விவகாரத்தில் நீதிமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் போராட்டங்கள் தொடரும். கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா திட்டவட்டம்.

180

காவிரி விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டங்கள் தொடரும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா உறுதிபட தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உதயமான நவம்பர் 1ஆம் தேதி அம்மாநிலத்தில் ராஜ்யோத்சவா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மாநில மக்களிடம் உரையாற்றிய முதலமைச்சர் சித்தராமைய்யா, கர்நாடக மாநிலம் உருவான இந்த நாள் தான் வரலாற்று சிறப்புமிக்க நாள் என்றும், அதற்காக உழைத்து, தியாகம் செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார். நிலம், நீர், மொழி பிரச்சினைகளில் கர்நாடகத்திற்கு நிரந்தரமாக அநீதி இழைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். காவிரி பிரச்சினையில் மாநில அரசு முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருவதாக கூறிய சித்தராமைய்யா, மாநிலத்தின் நலனை காக்க அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும், காவிரி விவகாரத்தில் கட்சி சார்பற்று நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவளித்து வரும் அனைவரும் சித்தராமைய்யா நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.