காவிரி நதி பாயும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கூட்டத்தை பிரதமர் உடனடியாக கூட்ட வேண்டும் என்று, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கேட்டுக் கொண்டுள்ளார்.

215

காவிரி நதி பாயும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கூட்டத்தை பிரதமர் உடனடியாக கூட்ட வேண்டும் என்று, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள அவர், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதால், பெங்களூருவுக்கு குடிநீர் இல்லாமல் போய்விடும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதால், கர்நாடகத்தில் ஒரு போக சாகுபடிக்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து தனது அரசு காவிரி நீரை தமிழகத்துக்கு விடுவித்துள்ளதாக சித்தராமையா தெரிவித்துள்ளார்.

எனவே, காவிரி பாயும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கூட்டத்தை பிரதமர் கூட்டி சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுபோன்று, 1995ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாநில முதலமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.