மகதாயி நதிநீர்ப் பங்கீடு பிரச்னையைத் தீர்க்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தி உள்ளார்.

160

மகதாயி நதிநீர்ப் பங்கீடு பிரச்னையைத் தீர்க்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள அவர், கர்நாடகம், மகாராஷ்டிரம், கோவா மாநிலங்களுக்கு இடையே மகதாயி நதிநீர்ப் பங்கீடு
பிரச்சினை நிலவி வருவதை சுட்டிக் காட்டியுள்ளார். கர்நாடகாவில் பருவ மழை பொய்த்து விட்டதால், தார்வாட், கதக், பெலகாவி, பாகல்கோட் மாவட்டங்களில் கடும் வறட்சி ஏற்பட்டு இருப்பதாக சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மலபிரபா நதியை நம்பியை இந்த பகுதியில் விவசாயம் நடைபெறும் நிலையில், தண்ணீரை மடை மாற்றுவது மட்டுமே சரியான நடவடிக்கை என்று அவர் கூறியுள்ளார். எனவே, மகதாயி பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள சித்தராமையா, மூன்று மாநில முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.