சித்தராமைய்யா தலைமையில் காங்கிரஸ்-மஜத கட்சிக்கூட்டம்.!

133

கர்நாடகத்தில் காங்கிரஸ் – மதச் சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசின் அமைச்சரவை, வரும் 22-ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்படுகிறது.

காங்கிரஸ் – மத சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் பெங்களூரில் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், 10ஆம் தேதி தொடங்கும் கர்நாடக சட்டசபைக் கூட்டத்தொடர் 21ஆம் தேதி முடிவடைந்தபிறகு, 22ஆம் தேதி அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமைய்யா, காங்கிரஸ் கட்சியில் புதிதாக 6 பேருக்கும், மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 2 பேருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

கர்நாடகாவில், முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.