சைபீரியாவில் ஏற்பட்டுள்ள பள்ளம் பெரிதாகி கொண்டிருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன!

2763

சைபீரியாவில் ஏற்பட்டுள்ள பள்ளம் பெரிதாகி கொண்டிருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சைபீரியாவில் பனிக் கட்டிகளால் மூடப்பட்ட நிலப்பகுதி அதிகம். பூமி வெப்ப மயமாததால், பனிகட்டிகள் உருகி பள்ளங்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில், யகூட்ஸ்க் நகரின் அருகில் ஒரு பள்ளம் பெரிதாகி கொண்டே இருக்கிறது. இந்தப் பள்ளம் தற்போது சுமார் 1 கிமீ நீளமும் 86 மீட்டர் ஆழமும் உள்ளது. பத்து வருடத்தில் சராசரியாக ஆண்டிற்கு 10 மீட்டர்கள் பெரிதாகி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பள்ளத்தில் இருந்து கார்பன் நச்சுப் பொருட்கள் வெளியாகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.