ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக தமிழர் சுட்டுக் கொலை..!

151

ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த ஒருவரை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சுட்டுக் கொன்றனர்.

ஆந்திராவில் சட்டவிரோதமாக நடைபெற்று வரும் செம்மரம் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காளஹஸ்தி வனப்பகுதி அடுத்த கொல்லப்பள்ளியில் கடத்தல் நடைபெறுவதாக கடப்பா மாவட்ட செம்மரம் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் படி சென்ற போலீசாருக்கும், கடத்தல்காரர்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது.

இதில், தமிழகத்தை சேர்ந்த காமராஜ் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆந்திராவில், தொடர்ந்து செம்மரம் கடத்தல் தொடர்பாக தமிழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், செம்மரம் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் தமிழர்கள் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.