தமிழ்நாட்டில், சென்னை மற்றும் எண்ணூர் கடற்கரையில், சனிக்கிழமையன்று ஏற்பட்ட எண்ணெய் கசிவை சுத்தம் செய்யும் பணி ஓரிரு நாட்களில் முடியும் என தெரிய வந்துள்ளது.

196

சென்னையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எண்ணூரில் காமராஜர் துறைமுகம் அருகே, இரு கப்பல்கள் மோதிக் கொண்டதை அடுத்து எண்ணேய் கசிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை, 60 டன்களுக்கும் அதிகமான கசடுகளை கடலோர பாதுகாவல் படையினர் அகற்றியுள்ளனர். எண்ணெய் கசடுகளை அகற்றும் பணியில் கடலோர பாதுகாவல் படையினர், மாநில அரசு ஊழியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் ஆகியோர் இணைந்து பணியாற்றிவருகின்றனர். இது போன்ற எண்ணெய் கசிவினால் ஏற்படும் பாதிப்புகளை கையாள்வதற்கு மத்திய அரசு, ஆபத்தினை தவிர்க்க கூடிய உயிரியல் சார்ந்த தீர்க்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பணி முழுமையாக முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.