2வது டெஸ்ட் போட்டிக்கு வலிமையாக திரும்பி வருவேன் : ஷிகர் தவான் நம்பிக்கை

917

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு வலிமையாக திரும்பி வருவேன் என்று ஷிகர் தவான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. இதற்கு தொடக்க வீரர் ஷிகர் தவானின் ஆட்டம் காரணம் என புகார் எழுந்தது. மேலும், டெஸ்ட் தொடருக்கு முன்பாக நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின் இரு இன்னிங்சிலும் தவான் டக் அவுட் ஆனார். இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டிக்கு வலிமையாக திரும்பி வருவேன் என்று ஷிகர் தவான் தனது டுவிட்டர் பக்கத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.