காங்கிரஸ் தலைமையகத்தில் ஷீலா தீட்சித் உடலுக்கு மரியாதை..!

118

டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த ஷீலா தீட்சித்தின் உடலுக்கு சோனியாகாந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

1998 முதல் 2013ஆம் ஆண்டு வரை டெல்லி முதலமைச்சராக இருந்த ஷீலா தீட்சித் உடல்நலக்குறைவால் நேற்றுக் காலமானார். நிசாமுதீனில் உள்ள அவர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்குப் பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் காங்கிரஸ் தலைமையகத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு சோனியாகாந்தி, பிரியங்கா உள்ளிட்டோர் ஷீலா தீட்சித் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.