திருச்சி அருகே மனித உருவில் பிறந்த ஆட்டுக் குட்டி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த நல்லவன்னிப்பட்டியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வளர்த்து வரும் ஆடு இரண்டு குட்டிகளை ஈன்றது. அதில் ஒரு குட்டி மனித உருவில் பிறந்து சிறிது நேரத்தில் இறந்தது. ஆட்டுக் குட்டியை அப்பகுதி மக்கள் வியப்புடன் கண்டனர். கரு முழுமையாக உருப்பெறாததே ஆடு மனித உருவில் பிறந்ததற்கு காரணம் என கால்நடை மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.