பழம்பெரும் ஹிந்தி நடிகரும், தயாரிப்பாளருமான சசி கபூர் மும்பையில் காலமானார் …!

715

பழம்பெரும் ஹிந்தி நடிகரும், தயாரிப்பாளருமான சசி கபூர் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 79.
பிரபல பாலிவுட் நடிகர் சசிகபூர் உடல்நலக்குறைவால் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 79. சசிகபூர் 1938ம் ஆண்டு மார்ச் 18-ம் தேதி பிறந்தார். பாலிவுட்டில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து, திரையுலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தார். நடிப்பு, இயக்குநர், தயாரிப்பாளர் என் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கினார். தீவார், தோ அவுர் தோ பாஞ்ச், நமக் லால் ஆகிய படங்கள் இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தன. உலக புகழ்பெற்ற இந்திய நடிகர்களில் ஒருவரான சசி கபூர் 160 படங்களில் நடித்துள்ளார். இவர் இதுவரை 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார். 2015-ம் ஆண்டு திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருதும், 2010ம் ஆண்டு பிலிம்பேரின் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் இவர் பெற்றுள்ளார்.