பாகுபலி 2 திரைப்படம் இந்திய சினிமாவின் பெருமை என்று நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் சங்கர் ஆகியோர் வாழ்த்து !

462

ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள பாகுபலி 2 திரைப்படம் இந்திய சினிமாவின் பெருமை என்று நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் சங்கர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரபாஸ், ராணா டகுபதி ஆகியோர் நடிப்பில், ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பாகுபலி 2.
மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் கடந்த 28 ஆம் தேதிமுதல் உலகம் முழுவதும் 9 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு மாபெரும் வசூலை குவித்துள்ளது. படக்குழுவினருக்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாகுபலி-2 இந்திய சினிமாவின் பெருமை என்று நடிகர் ரஜினி புகழாரம் சூட்டியுள்ளார். கடவுளின் சொந்த குழந்தை ராஜமவுலி என்றும், பாகுபலி-2 ஒரு தலை சிறந்த படைப்பு என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேபோன்று, இயக்குநர் ஷங்கரும் பாகுபலி-2 படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரம்மாண்டமான முயற்சி தன்னை பிரம்மிக்க வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினி காந்திற்கு நன்றி தெரிவித்துள்ள ராஜமவுலி, கடவுளே தனக்கு வாழ்த்து தெரிவித்ததாக உணர்கிறேன் என பதிவிட்டுள்ளார்.