ஷாங்காய் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடாலை வீழ்த்தி பெடரர் சாம்பியன்!

415

சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலக நடப்பு சாம்பியன் நடாலை வீழ்த்தி ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார்.
சீனா தலைநகர் பெயிஜிங்கில் ஷாங்காய் ஒபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியனும், ஸ்பெயின் வீரருமான ரபேல் நடால், 2-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரருடன் மோதினார்.
ஒரு மணி நேரம் 12 நிமிடங்கள் நீடித்த போட்டியில் பெடரர் 6-க்கு 4, 6-க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் முதல் நிலை வீரரான நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.
இதன்மூலம் பெடரர் இரண்டாம் முறையாக ஷாங்காய் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்தார். மேலும் அவர் இந்தாண்டில் பெறும் 6-வது சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.