திருச்சியில் தொடர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது

315

திருச்சியில் தொடர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள பங்குனி ஆற்றில் லாரிகள் மூலம், தொடர் மணல் கொள்ளைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பழூர் கிராம நிர்வாக அலுவலருக்கு மணல் திருட்டு தொடர்பாக ரகசிய புகார் வந்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மணல் ஏற்றிக்கொண்டிருந்த லாரிகளை பறிமுதல் செய்தனர். மணல் திருடிய லாரி ஓட்டுநர் உட்பட 3 பேரை கொள்ளிடம் போலீசார் கைது செய்தனர்.