கன்னியாகுமரி மாவட்டத்தில் விளைச்சல் குறைந்ததால், செவ்வாழைப் பழங்களுக்கு பெருந் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

300

தமிழகத்தில், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் செவ்வாழை அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. எனினும், கன்னியாகுமரி மாவட்டத்தில் விளையும் செவ்வாழைப் பழங்கள் அதிக சுவை உள்ளதால், அவற்றுக்கு இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல கிராக்கி உள்ளது.
இந்த ஆண்டின் முற்பகுதியில் நிலவிய கடும் வெப்பம் காரணமாக செவ்வாழை விளைச்சல் குறைந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக புயலுடன் பெய்த கனமழை காரணமாக வாழை மரங்கள் முறிந்து போயின. இதனால், கன்னியாகுமரியில் தற்போது செவ்வாழைப் பழங்களுக்கு பெருந் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு தார் ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் எனினும், இ்நத விலை உயர்வால் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக, விவசாயிகள் மற்றும் நுகர்வோர் பாதிப்படைந்துள்ளனர்.