7 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு சென்னையில் பள்ளிகள் திறப்பு !

497

7 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு சென்றனர்.
வடகிழக்கு பருவ மழையால் சென்னை பிரதான சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து முடங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டன. மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு 7 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனையடுத்து மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து போலீஸார், தீயணைப்பு துறையினர் கூட்டாக மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இதனால் சென்னையில் படிபடியாக வெள்ளநீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. 7 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் தங்களின் நண்பர்களை காணும் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு சென்றனர்.